NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சுவிட்சர்லாந்தில் புர்கா தடை – நேற்று முதல் அமுலுக்கு வந்தது!

ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் இஸ்லாமிய பெண்களின் முகம் மற்றும் உடல்களை மறைப்பதற்காக அணியும் புர்காவுக்கு அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

இதுதொடர்பாக அந்நாட்டின் ஆளும் பெடரல் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில், புர்காவுக்கு தடை என்ற உத்தரவு தொடர்பான தீர்மானம் 2021இல் நிறைவேற்றப்பட்டது.

இது நேற்று முதல் அமுலுக்கு வருகிறது என அறிவித்திருந்தது.

விமானங்கள், தூதரக வளாகங்கள் ஆகிய இடங்களில் இந்த தடை உத்தரவு அமுல்படுத்தப்படாது என்றும் வழிபாட்டுத் தலங்கள், பிற புனித தலங்களிலும், மசூதிகளுக்கும் இந்த உத்தரவு பொருந்தாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உடல்நிலை மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக முகத்தை மறைத்துக் கொள்ளலாம். மத ரீதியாக அல்லது தட்பவெப்ப நிலை காரணமாக அவ்வாறு செய்யக்கூடாது.

தடையை மீறுபவர்கள் உடனடியாக 10 ஆயிரம் ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும். அவ்வாறு செலுத்த மறுத்தால் அதிகபட்சமாக ஒரு இலட்சம் ரூபாய் வரை செலுத்த நேரிடும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், சுவிட்சர்லாந்தில் பெண்கள் முகத்தை மறைக்கும் வகையிலான புர்கா அணிவதற்கு தடை என்ற உத்தரவு நேற்று அமுலுக்கு வந்தது.

Share:

Related Articles