NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வடக்கில் மீண்டும் குடியேற்றங்கள்!

வடக்கு மாகாணத்தில் முன்னர் வாழ்ந்த சிங்கள மக்களை மீண்டும் அவர்கள் வாழ்ந்த இடங்களுக்குச் சென்று வதிவதற்கான வசதிகளைச் செய்துகொடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அறியமுடிகின்றது.

இதன்படி மீள்குடியேற விரும்புவோருக்கான வசதிகளை அரசாங்கம் செய்துகொடுக்குமெனத் தெரிகிறது.

1983ஆம் ஆண்டுக்கு முன்னர் வடக்கில் எவ்வளவு சிங்களவர்கள் எந்தெந்த இடங்களில் வாழ்ந்தார்கள் என்ற விபரங்கள் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தால் திரட்டப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.

ஆளுங்கட்சியின் மேலிட உத்தரவொன்றின் பிரகாரம் இந்தச் செயற்பாடுகள் இடம்பெறுவதாகத் தெரிகிறது.

வடக்கின் காணிகள் வெளியாரால் ஆக்கிரமிக்கப்படுவது குறித்தான சர்ச்சைகள் நீண்டகாலம் நிலவிவரும் நிலையில், அங்கு சிங்கள மீள்குடியேற்றங்களுக்கு அரசாங்கம் தயாராகி வருவது தமிழர்களிடையே சஞ்சலத்தை ஏற்படுத்தியுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles