தென்கொரியாவில் அண்மையில், இடம்பெற்ற விமான விபத்தின் போது விபத்துக்குள்ளான விமானத்தின் கறுப்பு பெட்டி, விபத்திற்கு நான்கு நிமிடங்களுக்கு முன்னதாகவே பதிவு செய்யும் செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளதாக தென்கொரிய போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஏற்பட்ட குறித்த விமான விபத்தில் 179 பேர் பலியாகினர்.
இந்தநிலையில், குறித்த விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவதற்காக அந்த நாட்டு அதிகாரிகளால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன.
விமானத்தின் கறுப்பு பெட்டியை ஆய்வு செய்த அதிகாரிகள், விமானத்தின் கறுப்பு பெட்டிகள் பதிவை நிறுத்துவதற்கான காரணங்கள் தொடர்பில் ஆரம்பக் கட்ட பகுப்பாய்வை மேற்கொண்டனர்.
குறித்த கறுப்புப் பெட்டியில் முக்கியமான சில தரவுகள் காணாமல் போனமை தொடர்பில் ஆரம்பிக்கப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த கறுப்பு பெட்டி அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு சபையின் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.
இந்தநிலையில், ஜேஜு விமான நிறுவனத்திற்கு சொந்தமான குறித்த விமானம் விபத்துக்குள்ளாவதற்கு 4 நிமிடங்களுக்கு முன்னதாக அதன் பதிவு செய்யும் செயற்பாட்டை இடைநிறுத்தியுள்ளதாக தென்கொரியாவின் போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.