9ஆவது ICC சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 19ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
குறித்த தொடரானது பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ளது.
இதன்படி பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக இந்திய அணி பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்ததால், இந்திய அணிக்குரிய ஆட்டங்கள் மாத்திரம் டுபாய்க்கு மாற்றப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த தொடருக்கான இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் வீரர் மஹேந்திரசிங் டோனி நியமிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. கடந்த 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற இருபதுக்கு 20 உலகக்கிண்ண தொடரில் இந்திய அணியின் ஆலோசகராக டோனி செயற்பட்டமை சுட்டிக்காட்டத்தக்கது.