ICC ஆடவர் ஒருநாள் பந்துவீச்சு தரவரிசையில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் மஹீஷ் தீக்ஷன மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.
நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இறுதி இரண்டு போட்டிகளில் 7 விக்கெட்டுகளை வீழ்த்திய நிலையில் இவ்வாறு தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.