பெரியவர்களிடையே பரவலாகக் காணப்படும் நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் என்பன தற்போது சிறுவர்களிடையேயும் அதிகரிக்கும் அபாயம் இருப்பதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள ஸ்ரீ ஜெயவர்தனபுர மருத்துவ பீடத்தின் குழந்தைகள் மருத்துவத் துறையின் பேராசிரியர் ருவந்தி பெரேரா, 12, 14 மற்றும் 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இவற்றினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.
பெற்றோர்கள் தங்கள் சிறுவர்களை இந்த நோய்களிலிருந்து பாதுகாப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
சிறுவர்களிடையே மனநிலை தொடர்பான நோய்களும் தொடர்ந்து பதிவாகி வருகின்றன.
எனவே பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு பேராசிரியர் ருவந்தி பெரேரா அறிவுறுத்தியுள்ளார்.