அண்மையில் இடம்பெற்ற தென்கொரிய விமான விபத்திற்கு பறவை மோதியதே காரணம் என தெரியவந்துள்ளது.
கடந்த மாதம் இடம்பெற்ற விமான விபத்தில் 179 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்துக்கு பறவை மோதியதே காரணம் என்று உறுதி செய்யும் வகையில் ஆதாரங்கள் கிடைத்துள்ளன.
விமானத்தின் கருப்பு பெட்டிகளை மீட்டு, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
விபத்து நடப்பதற்கு 4 நிமிடங்களுக்கு முன்பு, விமானத்தின் பிரதான இயந்திரப் பகுதியில் பறவை ஒன்று மோதியதாகவும், இதனால், அவசரகால எச்சரிக்கையை விமானிகள் வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதை உறுதி செய்யும் விதமாக, விபத்துக்குள்ளான விமானத்தின் இயந்திரத்தில் பறவையின் இறகு மற்றும் இரத்தக்கறை இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.