புற்றுநோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகளை பிராந்திய மட்டத்தில் விஸ்தரிக்க அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய, அநுராதபுர, குருநாகல், பதுளை, ஹம்பாந்தோட்டை மற்றும் இரத்தினபுரி மாவட்ட வைத்தியசாலைகளில் விரைவில் புற்றுநோயாளிகளுக்கான கதிர் சிகிச்சை ஆரம்பிக்கப்படவுள்ளது.
அதன் மூலம் புற்றுநோயாளிகள் கதிர் சிகிச்சைக்காக தூரப் பிரயாணம் செய்து கொழும்புக்கு வருவதற்குப் பதிலாக தங்கள் வசிப்பிடங்களுக்கு அண்மையில் உள்ள வைத்தியசாலைகளில் அதற்கான சிகிச்சைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தச் செயற்பாட்டின் ஆரம்ப கட்டமாக, குறிப்பிட்ட வைத்தியசாலைகளுக்கு உயர்தர கதிர்சிகிச்சை உபகரணங்களைத் தருவிப்பதற்கான உடன்படிக்கை ஒன்று நேற்று சுகாதார அமைச்சில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.