NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொழும்பு பொலிஸ் நிலையங்களுக்கு விசேட அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை!

நாட்டில் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ள காரணத்தால் கொழும்பு நகரத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு விசேட அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குற்றச் செயல்கள் அதிகமாக நடைபெறும் பகுதிகளில், இரவும் பகலும் அவசரகால தடைகளை ஏற்படுத்தவும், நடமாடும் பாதுகாப்பு பணிகளை அதிகரிக்கவும், விசேட அதிரடிப் படையினரை நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 20 நாட்களில், 7 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாகவும் அவற்றில் பெரும்பாலானவை கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளிலிருந்து பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த துப்பாக்கிச்சூட்டில் 5 பேர் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப்பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

இந்தத் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் வெலிகம, அத்திடிய, படோவிட்ட, கல்கிஸ்ஸ, கொஹுவல மற்றும் மன்னார் ஆகிய இடங்களில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஆகையால், இவ்வாறான குற்றச் செயல்களை தடுக்கும் நோக்கில், கொழும்பு நகரத்தில் உள்ள பொலிஸ் நிலையங்களுக்கு விசேட அதிரடிப் படையினரை அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles