உலகளாவிய வர்த்தகப் பரிவர்த்தனைக்கு அமெரிக்க டொலரே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வருவதால், உலக நிதிசார் அமைப்பில் பல ஆண்டுகளாக அமெரிக்கா ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
அந்தவகையில், இதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் டொலருக்கு மாற்றாக தங்கள் நாட்டு பணத்தின் மூலமே பரிவர்த்தனைகளை மேற்கொள்ள பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பில் உள்ள இந்தியா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முன்னெடுப்புகளை தொடங்கியுள்ளன.
சமீபத்தில் அமெரிக்க டொலருக்கு மாற்றாக வேறு பணத்தை பயன்படுத்த பிரிக்ஸ் அமைப்பு ஆலோசித்த நிலையில், அதற்கு அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள டொனால்ட் ட்ரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.
அத்தோடு, பிரிக்ஸ் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படலாம் என ட்ரம்ப் அறிவித்துள்ளமைக்கு அமைய, தற்பொழுது பிரிக்ஸ் அமைப்பிலுள்ள நாடுகளுக்கு ட்ரம்பின் இந்த அறிவிப்பு பெரும் சவாலாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.