NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கையில் உள்ள 10 வங்கிகள் Fitch Ratings இல் தரமுயர்வு!

இலங்கையில் உள்ள 10 வங்கிகளின் தேசிய நீண்டகால மதிப்பீடுகளை ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தரமுயர்த்தியுள்ளது. 

இலங்கையின் சமீபத்திய இறையாண்மை மேம்பாடு மற்றும் மறுசீரமைப்புகளுக்கு அமைய இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

அத்துடன் இலங்கையில் உள்ள 5 வங்கிகளின் தேசிய நீண்டகால மதிப்பீடுகளை ஃபிட்ச் ரேட்டிங்ஸ் உறுதி செய்துள்ளது. 

இலங்கையின் நெடுங்கால வெளிநாட்டு நாணய கடன் வழங்குநர் இயலாமை மதிப்பீட்டை ‘RD என்ற கட்டுப்படுத்தப்பட்ட இயலாமை நிலையிலிருந்து CCC 10 நிலைக்கு ஃபிட்ச் ரேட்டிங்ஸ் ஏலவே உயர்த்தியது. 

அதேநேரம் உள்ளூர் நாணய கடன் வழங்குநர் மதிப்பீட்டையும் CCC- என்ற நிலையிலிருந்து CCC10 நிலைக்கு ஃபிட்ச் ரேட்டிங்ஸ் தரமுயர்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles