இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் நேற்று வரவு – செலவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இதுதொடர்பில் பிரதமர் நரேந்திர மோடி கருத்து தெரிவிக்கையில், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்தில் இன்று ஒரு முக்கிய மைல்கல் எட்டப்பட்டுள்ளதாகவும், 140 கோடி இந்தியர்களின் இலட்சிய வரவு – செலவு திட்டம் இது என்றும் குறிப்பிட்டார்.
இந்த வரவு – செலவுத் திட்டம் சேமிப்பு, முதலீடு, நுகர்வு மற்றும் வளர்ச்சியை வேகமாக அதிகரிக்கும் என்பதோடு, அனைத்துத் துறைகளிலும் வேலைவாய்ப்புக்கு ஒவ்வொரு வகையிலும் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
அந்தவகையில், எதிர்வரும் காலங்களில் பெரிய மாற்றத்தை கொண்டுவரப்போகும் சீர்திருத்தங்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி மேலும் தெரிவித்துள்ளார்.