அமெரிக்காவுக்குள் நுழையும் சட்டவிரோத குடியேற்றம் மற்றும் போதை பொருட்களின் பெரும் அச்சுறுத்தல்களை தடுக்கும் விதமாக கனடா மற்றும் மெக்சிகோ நாட்டிலிருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 25 சதவீதம் வரியும், சீனாவில் இருந்து இறக்குமதியாகும் பொருட்களுக்கு 10 சதவீதம் வரியும் விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்திருந்தார்.
மேலும், நெருக்கடிகள் தணியும் வரை இந்த வரி விதிப்புகள் தொடரும் எனவும் வெள்ளை மாளிகை கூறியுள்ளது.
இதேவேளை, அமெரிக்காவின் வரி விதிப்புக்கு பதிலடியாக கனடாவும் 25 சதவிகித வரியை அமெரிக்க பொருட்களுக்கு விதித்துள்ளதோடு, மெக்சிகோவும் பதிலடி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த நிலையில், அமெரிக்காவின் வரி விதிப்பு சர்வதேச வர்த்தக விதிகளை மீறுவதாக உள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அத்தோடு, அமெரிக்கவின் இந்த செயல் இரண்டு நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மற்றும் போதைப்பொருள் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்கு இடையூறாக அமையும் எனவும் சீன வெளிவிவகார அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.