அரசாங்கமானது மக்களைப் பலப்படுத்தி, அவர்களின் அடிப்படைத் தேவைகளுக்கான வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டிய நிலையில், இந்த அரசாங்கம் நுகர்வோருக்கு மலிவு விலையில் அரிசி மற்றும் தேங்காய் போன்றவற்றையேனும் வழங்க முடியாத நிலையை எட்டியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம் சாட்டியுள்ளார்.
இரத்தினபுரியில் ஐக்கிய மக்கள் சக்தி செயற்பாட்டு அலுவலகத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், அரசாங்கமொன்றானது எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதை நன்கு புரிந்து கொண்டு திட்டமிட்டு செயற்பட வேண்டும். ஆனால் அவ்வாறான போக்கு இந்த அரசாங்கத்திடம் இல்லை என சுட்டிக்காட்டினார்.