அண்மையில் நாடு முழுவதும் ஏற்பட்ட மின்வெட்டு காரணமாக சிறு தொழிலதிபர்கள் துறைக்கு ஏற்பட்ட சேதங்களுக்கு இழப்பீடு வழங்குமாறு சிறு தொழிலதிபர்கள் சங்கம் அரசாங்கத்தை கோரியுள்ளது
இந்தப் பிரச்சினைக்கான பழியை ஒரு குரங்கின் மீது சுமத்தி, தங்கள் திறமையின்மையை மறைக்கக்கூடாது என்றும் அச்சங்கம் தெரிவித்துள்ளது.
ஊடகங்களுக்கு உரையாற்றிய அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் நிருக்ஷ குமார, திடீர் மின் தடை காரணமாக தங்கள் வணிகங்கள் குறிப்பிடத்தக்க இழப்பைச் சந்தித்ததாகக் கூறினார்.
அத்துடன், 2010 மற்றும் 2025க்கு இடையில் இலங்கை மின்சார சபையால் பதிவு செய்யப்பட்ட ஏழாவது மிகப்பெரிய மின் தடை இதுவாகும் என்றும் குறிப்பிட்டார். இந்த மின் தடை காரணமாக, தமது வணிகங்கள் பெரும் இழப்பை சந்தித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில், தொழிலதிபர்கள் மீதான நிதி தாக்கத்தை, இலங்கை மின்சார சபை மற்றும் எரிசக்தி அமைச்சு ஆகியன கணக்கிட்டு இழப்பீடு வழங்க வேண்டும் என்று அவர் கோரினார்.