2025 மற்றும் 2026 ஆம் ஆண்டு வரை பால் உற்பத்தியை மேம்படுத்துவதற்காக 2,500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீ செய்யப்பட்டுள்ளதாகவும் நீர் வழங்கல் அபிவிருத்திக்காக 7,800 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, வடக்கில் தேங்காய் உற்பத்திக்காக 16,000 ஏக்கரை நிர்மாணிப்பதற்காக 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
மீன்வள அபிவிருத்திக்காக 200 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் தற்போது நிதி அமைச்சர் என்ற வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இதனைத் குறிப்பிட்டுள்ளார்.