அனுராதபுரம் – உடமலுவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜேதவனாராமய பகுதியில் இன்று அதிகாலை (22) பஸ் ஒன்று தீப்பற்றி எரிந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்
யாத்திரிகர் குழுவை ஏற்றிச்சென்ற பஸ் ஒன்றே இவ்வாறு தீப்பற்றி எரிந்துள்ளது.
குறித்த விபத்தில் எம்பிலிப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 55 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை உடமலுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.