NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இலங்கைக்கு உடனடி நிதி வசதியாக 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புதல்..!

சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு 48 மாத கால நீட்டிக்கப்பட்ட நிதி வசதி திட்டத்தின் கீழ் இலங்கையுடனான மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்துள்ள நிலையில்இ இதன் மூலம்இ பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிப்பதற்காகஇ இலங்கைக்கு உடனடி நிதி வசதியாக 336 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் கீழ் இதுவரை சர்வதேச நாணய நிதியத்திலிருந்து இலங்கைக்கு வழங்கப்பட்ட மொத்த நிதி உதவி 1.34 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும் அதிகரித்துள்ளதோடு
இலங்கையின் செயற்பாடு இந்தத் திட்டத்தின் கீழ் வலுவாக உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

அத்தோடு சமூகச் செலவினங்களுக்கான சுட்டெண் இலக்கைத் தவிரஇ 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதிக்கான ஏனைய அனைத்து அளவு இலக்குகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு
2025 ஆம் ஆண்டு ஜனவரி மாத இறுதியில் பல கட்டமைப்பு அளவுகோல்கள் பூர்த்தி செய்யப்பட்டோ அல்லது தாமதத்துடன் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அண்மையில் நிறைவு செய்யப்பட்ட கடன் மறுசீரமைப்பு பணிகள் கடன் நிலைத்தன்மையை உருவாக்குவதற்கான பாதையில் வெற்றிகரமான முடிவாக உள்ளதாகவும் சர்வதேச நாணய நிதியத்தின் நிர்வாகக் குழு குறிப்பிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles