நாட்டில் தற்போது நிலவும் மழை நிலைமைகள் தணியும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
கடந்த இரண்டு நாட்களாக பெய்த கன மழையால் யால தேசிய பூங்காவின் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளதோடு, பூங்காவிற்குள் உள்ள சில ஏரிகளின் கரைகள் உடைந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதனால், வனவிலங்குகளின் பாதுகாப்பு மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, இன்று முதல் மழை நிலமைகள் தணியும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, யால வலய இலக்கம் 1 -ஐ சேர்ந்த கடகமுவ மற்றும் பலடுபான நுழைவு வாயில்கள் மூடப்பட்டுள்ளன.
மேலும், யால தேசிய பூங்காவின் நுழைவு வீதியான நிமலவ பகுதியில் பல வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வித முன்னறிவிப்பும் இன்றி எடுக்கப்பட்ட இந்த தீர்மானத்தால், முற்பணம் செலுத்திய சுற்றுலாப் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.