பட்டலந்த ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையை இந்த வாரத்துக்குள் பாராளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க நேற்றைய (11) அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த அறிக்கை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் எடுக்க வேண்டிய அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ சற்று முன்னர் தெரிவித்தார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது இடம்பெற்றுவரும் அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.