NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேவேந்திரமுனை துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட மூவர் கைது..!

மாத்தறை – தேவேந்திரமுனை ஸ்ரீ விஷ்ணு ஆலயத்திற்கு முன்பாக நேற்று இரவு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் பெண் ஒருவர் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டுபாயில் தலைமறைவாக இருக்கும் ‘பாலே மல்லி’ என்ற ஷெஹான் சத்சர என்ற குற்றவாளியால் இந்தக் கொலைகள் நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் தெவினுவர, கபுகம்புர பகுதியி​ல் வீடொன்றில் நடைபெற்ற பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்டு திரும்பிக் கொண்டிருந்த அதே பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய இருவரே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles