பொருளாதார வாய்ப்புகளை பெறக்கூடிய விதத்தில், ஒரு சிறந்த தலை முறையினை உருவாக்கும் நோக்கில் புதிய கல்வி சீர்திருத்தத்தினை மேற்கொள்ளவிருப்பதாக பிரதமர் ”ஹரினி அமரசூர்ய ”தெரிவித்துள்ளார். இதன் மூலம் உலக அறிவைப் பெறுவதற்கு இலங்கை பிள்ளைகளை தயார்ப்படுத்துவது மற்றும் ஆன்ம சக்தியுடன் கூடிய ஒரு சிறந்த தலைமுறையினை உருவாக்குவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாக இருப்பதாகவும் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு கூறியிருந்தார்.
மேலும் அவர் கூறுகையில் கல்வியின் நோக்கத்தை பரந்த அளவில் நாம் சிந்திக்க வேண்டும்; கல்வியின் ஒரே நோக்கம் வேலை சந்தைக்கு தயார்படுத்துவது மட்டுமல்ல மாறாக சமூகத்திற்கு எப்படிப்பட்ட ஒரு நபர் தேவை என்பதையும் நம்பிக்கையுடன் சமூகத்திற்கு சென்று அறிவைப் பெறக்கூடிய ஒரு நபரையும் உருவாக்குவது நமது கல்வி முறையின்நோக்கமாக காணப்பட வேண்டும் . அப்படிப்பட்ட ஒரு நபர் வெளியே சென்று ”யாராவது எனக்கு வேலை தருவார்களா’ என்று காத்திருக்க மாட்டார்” அதற்க்கு பதிலாக அந்த வேலை வாய்ப்பையும் பொருளாதாரத்தில் பங்கேற்கும் விதத்தையும் உருவாக்க முற்படுவார்.
இவ்வாறானதொரு சமூகத்தினை உருவாக்குவதற்க்கே கல்வி முறைமையில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவுள்ளதாக பிரதமர் ஹரினி அமரசூர்ய தெரிவித்திருந்தார்.