NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது..!

களுத்துறை குற்றப்பிரிவு அதிகாரிகள் சுமார் 75 இலட்சம் ரூபா பெறுமதியான ஹஷீஷ் போதைப்பொருட்களுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர் பாணந்துறை அலுபோமுல்ல பகுதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாணந்துறை பாலத்திற்கு அருகில் சந்தேக நபரை சோதனை செய்தபோதுஇ ஒரு பொலித்தீன் பையுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஒரு கிலோகிராம் 870 கிராம் ஹஷீஷ் மற்றும் கடத்தல் சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படும் இரண்டு கையடக்க தொலைபேசிகளை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதன்படி குறித்த போதைப்பொருட்கள் வெளிநாட்டில் பதுங்கி இருப்பதாகக் தெரிவிக்கப்படும் பிரபல போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும்இ கைதான சந்தேக நபரை தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்று மேலதிக விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

அத்துடன் சந்தேக நபர் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாகவும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுத்துறை குற்றப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles