பாரதி கண்ணம்மா, பாண்டவர் பூமி, வெற்றிக் கொடிகட்டு, தவமாய் தவமிருந்து உள்ளிட்ட பல வெற்றிப் படங்களை திரைக்கு கொடுத்த நடிகரும் இயக்குனரான சேரனின் இயக்கத்திலும் நடிப்பிலும் 2004 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம்தான் ”ஆட்டோக்ராப்”.

பள்ளிப் பருவம், கல்லூரி பருவம், வேலை தேடும் பருவம் என ஒரு சராசரி தமிழ் இளைஞனின் வாழ்க்கையை தத்ரூபமாக சித்தரித்த இந்த திரைப்படம் 100 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி வெற்றிச்சாதனைப்படைத்துள்ளது.
இந்த நிலையில், திரைபடம் வெளியாகி 21 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில் எதிர்வருகின்ற மே 16ம் திகதி ரீ-ரிலீஸாக உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தனக்கு மிக மகிழ்ச்சி என நடிகர் மற்றும் இயக்குனரான சேரன் தன்னுடைய x தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
