ஹட்டன் – மஸ்கெலியா பகுதியில் குளவி கொட்டுக்கு இலக்காகி நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்
மஸ்கெலியா, சாமிமலை பகுதியை சேர்ந்த 35 வயது மற்றும் 50 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த நால்வரும் சிகிச்சைக்காக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மூவர் மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.