தமிழ் சினிமாவில் காமெடி கலந்த நடிப்பில் சிறந்து விளங்கிய ஒரு நடிகர்தான் சிவகார்த்திகேயன். இவர் தன்னுடைய எல்லையற்ற நடிப்பு திறமையினால் தனக்கென ரசிகர்களை உருவாக்கியவர் . மேலும் இவரின் நடிப்பில் இறுதியாக வெளிவந்து உலகளாவிய ரீதியில் வசூலை குவித்த திரைப்படம்தான் அமரன். இத்திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து , இயக்குனர் சுதகொங்கராவின் இயக்கத்தில் பராசக்தி திரைப்படத்தில் நடித்துவருகிறார்.
இதேசமயம் ஏ.ஆர். முருகதாஸின் இயக்கத்தில் தற்போது தன்னுடைய 23 ஆவது திரைப்படமான மதராஸியில் நடித்து வ வருகிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துவருகின்றனர்.

இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கக்கூடிய குறித்த திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் மற்றும் டைடில் டீஸர் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது.
திரைப்படம் எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வெளியாக இருக்கிறது. மேலும் திரைபடத்தின் இறுதிக்கட்ட காட்சியை இலங்கையில் படக்குழு எடுக்க தீர்மானித்தது. அதன் படி தற்போது இலங்கையில் படக்குழு திரைப்பட காட்சிகளை எடுத்துவருகின்றனர்.