அறிமுக இயக்குனரான அபிஷான் ஜீவித்தான் இயக்கத்தில் சசிகுமார், சிம்பரன் உள்ளிட்டோர் நடிப்பில் இம்மாதம் முதலாம் திகதி திரைக்கு வந்த திரைப்படம்தான் ”டூரிஸ்ட் பேமிலி” ,
இத்திரைப்படம் திரைக்கு வந்து சில நாட்களிலேயே மக்கள் மத்தியிலும் சரி திரையுலக பிரபலன்களிடமும் சரி தொடர்ந்தும் பாராட்டுக்களை பெற்றுவருகிறது. அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நடிகர் தனுஷ் ,நடிகர் சிவகார்த்திகேயன், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர் பாராட்டி வந்த நிலையில் தற்போது Pan India Director என அடைமொழி சூட்டி அழைக்கப்படும் இயக்குனர் எஸ்.எஸ். ராஜமவுலி அவர்கள் இத்திரைப்படம் குறித்து கண்ணுடைய கருத்தை பதிவிட்டுள்ளார்.

அதில்; டூரிஸ்ட் பேமிலி ஒரு அற்புதமான திரைப்படம் ,திரைப்படத்தின் ஆரம்பத்திலிருந்து முடிவு வரை என்னை ஒரு ஆர்வமான நிலையிலே வைத்திருந்தது. அபிஷன் ஜீவித்தான் சிறப்பாக கதை ஏழுதி இயக்கியுள்ளார், சிறந்ததொரு சினிமா அனுபவத்தை தந்தமைக்கு நன்றி ; மேலும் இந்த திரைப்படத்தோனை யாரும் பார்க்க தவறவிட்டு விடாதீர்கள். என்று தன்னுடைய சமூக வலைத்தள பக்கமாக தன கருத்தை பதிவிட்டிருந்தார்.
மேலும் இதற்க்கு தன் சார்பில் இயக்குனர் அபிஷன் ஜீவிந்தன் ‘மிக்க நன்றி, எஸ்.எஸ்.ராஜமவுலி சார். உங்களின் வார்த்தைகள் உண்மையிலேயே இந்த நாளை இன்னும் சிறப்பானதாக்கியது. நன்றி கூற வார்த்தைகள் இல்லை’ என்று அதற்க்கு பதிலளித்திருந்தார்.