NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புத்தாண்டை முன்னிட்டு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க தீர்மானம்!

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

அதன்படி இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீடு அதிகரிக்கப்படவுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

பண்டிகைக் காலங்களில் அதிகரித்து வரும் தேவைக்கு ஏற்ப, தேவையான எரிபொருள் இருப்புக்களை, இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் முன்பதிவு செய்து பெற்றுக்கொண்டுள்ளது.

எனவே, எவ்வித சிரமமும் இன்றி இந்த தீர்மானத்தை அமுல்படுத்த முடியும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிவிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, முச்சக்கர வண்டிகளுக்கான ஒதுக்கீடு 5 இலிருந்து 8 லீற்றராகவும் மோட்டார் சைக்கிள்களுக்கான ஒதுக்கீடு 4 இலிருந்து 7 லீற்றராகவும் பஸ்களுக்கான ஒதுக்கீடு 40 இலிருந்து 60 லீற்றராகவும்; அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, கார்களுக்கான ஒதுக்கீடு 20 இலிருந்து 30 லீற்றராகவும் லொறிகளுக்கான ஒதுக்கீடு 50 இலிருந்து 75 லீற்றராகவும் விசேட தேவை வாகனங்களுக்கான ஒதுக்கீடு 20 இலிருந்து 30 லீற்றராகவும் வான்களுக்கான எரிபொருள் ஒதுக்கீடு 20 இலிருந்து 30 லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Share:

Related Articles