உங்கள் Android மொபைலுடன் Connect செய்ய புத்தம் புதிய ஸ்மார்ட் வாட்ச்சை வாங்க விரும்புகிறீர்களா..? கடந்த 2022-ஆம் ஆண்டில் ஸ்மார்ட் வாட்ச் மார்க்கெட் டில் சாம்சங், கூகுள் மற்றும் ஃபிட்பிட் போன்ற சிறந்த பிராண்டுகள் அற்புதமான தயாரிப்புகளை அறிமுகப்படுத்தின. ஆரோக்கியத்தில் ஆர்வ உணர்வுள்ள மக்களுக்காக அடுத்த தலைமுறை டிவைஸ்களை பல நிறுவனங்கள் ஸ்மார்ட் வாட்ச் மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தின. தற்போது மார்க்கெட்டில் கிடைக்கும் அருமையான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் வாட்ச்களின் பட்டியல் இங்கே :
சாம்சங் வாட்ச்5 ப்ரோ : சாம்சங்கின் இந்த Watch5 Pro-வில் காணப்படும் சிறப்பம்சங்கள் காரணமாக 2023-ஆம் ஆண்டில் சிறந்த ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் வாட்ச் என்ற பட்டியலில் டாப்பில் இருக்கிறது. ஃபிட்னஸ் டிராக்கிங், பில்ட் குவாலிட்டி, டிஸ்ப்ளே, பேட்டரி மற்றும் சாஃப்ட்வேர் உட்பட கிட்டத்தட்ட எல்லாவற்றிலும் இது வின்னராக உள்ளது. இந்த ஸ்மார்ட் வாட்ச் ஃபிட்னஸ் ஆர்வலர்களுக்காக உருவாக்கப்பட்டது. இந்த டிவைஸ் casual-friendly மற்றும் லாங்-லாஸ்ட் பேட்டரி லைஃப் மற்றும் சோஷியல் அம்சங்களை வழங்குகிறது. 1.4- இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் WearOS கொண்ட இந்த டிவைஸ் 46.5 கிராம் எடை கொண்டது. மேலும் 590mAh பேட்டரி மற்றும் 5 ATM+IP68 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் மற்றும் ரேட்டிங்கை கொண்டுள்ளது.
கூகுள் பிக்சல் வாட்ச் : சரியான வடிவமைப்பு கலவை மற்றும் சிறந்த செயல்திறன் கொண்ட ஸ்மார்ட்ச் வாட்ச் வாங்க விரும்புகிறீர்களா.! Google Pixel Watch சிறந்த தேர்வாக இருக்கும். இது பிக்சல் ஃபோன் யூஸர்களுக்கு சிறந்த தேர்வாக மட்டுமல்லாமல், பிரீமியம் ஃபிட்னஸ் டிராக்கிங் திறன்களைக் கொண்ட சிறிய அளவிலான ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் வாட்சை விரும்புபவர்களுக்கும் சிறந்தது. இந்த டிவைஸானது WatchOS மற்றும் ஃபிட்பிட் டெக்னலாஜிக்களுடன் வருகிறது. டிசைனை பொறுத்தவரை, இது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 -ஆல் பாதுகாக்கப்படும் அழகான AMOLED டிஸ்ப்ளேவைக் கொண்டுள்ளது. 1.2 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் WearOS & Fitbit கொண்ட இந்த டிவைஸ் 36 கிராம் எடை கொண்டது. மேலும் 294 mAh பேட்டரி மற்றும் 5 ATM+IP68 வாட்டர் ரெசிஸ்டென்ஸ் ரேட்டிங்கை கொண்டுள்ளது.
ஃபிட்பிட் சென்ஸ் 2 : ஃபிட்னஸை மையமாகக் கொண்ட ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் வாட்ச்சை தேடுகிறீர்களானால் ஃபிட்பிட் சென்ஸ் 2 சரியானது. இந்த டிவைஸ் உங்கள் இதயம், தூக்கம், ஸ்ட்ரஸ் லெவல்ஸ், ஒர்கவுட்ஸ் போன்ற பல அளவீடுகளை கண்காணிக்கும் ஹெல்த்-ட்ராகிங் அம்சங்களுடன் வருகிறது. மேலும் 6 மாதங்களுக்கான ஃபிட்பிட் பிரீமியம் சந்தா இதனுடன் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட் வாட்ச் Health-tracking functionalities-களின் நீண்ட பட்டியல், வசதியான டிசைன் மற்றும் சிறந்த பேட்டரி லைஃபை வழங்குகிறது. மேலும் இதில் கூகுள் ப்ளே ஸ்டோர் இல்லை, இது யூஸர்கள் தேர்ட் பார்ட்டி ஆப்ஸ்களை இன்ஸ்டால் செய்வதை தடுக்கிறது. 1.5 இன்ச் AMOLED டிஸ்ப்ளே மற்றும் Fitbit technology கொண்ட இந்த டிவைஸ் 36 கிராம் எடை கொண்டது. மேலும் 6 நாட்களுக்கும் மேலான பேட்டரி லைஃப் மற்றும் 50 மீட்டர் வரை வாட்டர் ரெசிஸ்டென்ஸை கொண்டுள்ளது.
கார்மின் இன்ஸ்டிங்க்ட் 2 : சூரிய ஒளியில் ரீசார்ஜ் செய்ய கூடிய கூல் & ரக்கர்ட் ஸ்மார்ட் வாட்ச் வேண்டுமா..? Garmin Instinct 2-வை நீங்கள் தேர்வு செய்யலாம். இந்த ஸ்மார்ட் வாட்ச் சோலார் பேனலை கொண்டுள்ளது, இதனால் யூஸர்கள் வெயிலில் அணிந்து செல்வதன் மூலம் சார்ஜ் செய்யலாம். சோலார் சார்ஜிங் காரணமாக வரம்பற்ற பேட்டரி லைஃபை பெறலாம். இதில் டச்-ஸ்கிரீன் ஆப்ஷன் இல்லை. இந்த வாட்ச் ஒரு வலுவான மற்றும் வசதியான பில்ட் குவாலிட்டியை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவைஸ் பல ஹெல்த் மானிட்டரிங், சேஃப்ட்டி ட்ராக்கிங் அம்சங்கள், அட்வான்ஸ்டு அவுட்டோர் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஒர்கவுட் ட்ராக்கிங் மற்றும் பலவற்றுடன் வருகிறது. 0.9 இன்ச் மோனோக்ரோம் டிஸ்ப்ளே மற்றும் Garmin OS கொண்ட இந்த டிவைஸ் 52 கிராம் எடை கொண்டது. மேலும் 28 நாட்கள் வரை பேட்டரி லைஃப் + சோலார் பவர் பயன்படுத்தும் போது அன்லிமிட்டட் சார்ஜை வழங்குகிறது. 10 ATM வாட்டர் ரேட்டிங் கொண்டுள்ளது.
ஃபாசில் ஜென் 6 : 1.28 இன்ச் கலர் AMOLED டிஸ்ப்ளே, 99 கிராம் எடை, WearOS, 24மணி நேர பேட்டரி லைஃப் மற்றும் 3 ATM வாட்டர் ரேட்டிங்கை கொண்டுள்ளது இந்த Fossil Gen 6 ஸ்மார்ட் வாட்ச். கூகுளின் WearOS தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் இந்த டிவைஸ் அதன் அனலாக் வாட்ச் போன்ற ஸ்டைலான வடிவமைப்பு மற்றும் முரட்டுத்தனமான ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் கேஸில் இணைக்கப்பட்ட AMOLED டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. நீங்கள் சொகுசு பிராண்டின் ரசிகர் என்றால் சூப்பரான ஸ்டைலிஷ் ஸ்மார்ட் வாட்ச் வாங்க விரும்பினால் Fossil Gen 6 வாங்கலாம். மேம்பட்ட உடல்நலம், ஆக்டிவிட்டி மானிட்டரிங் மற்றும் லாங் பேட்டரி லைஃப் வேண்டாம் என நினைக்கும் ஃபேஷன் விரும்பிகளுக்கு இந்த டிவைஸ் சரியானது.