NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குரங்குகள் ஏற்றுமதி விவகாரம் – தகவல்களை மறுத்தது சீன தூதரகம்!

பரிசோதனை நோக்கத்திற்காக சீன தனியார் நிறுவனமொன்றுக்கு 100,000 அழிந்துவரும் ‘டோக் மக்காக்’ (Toque macaque) குரங்குகளை ஏற்றுமதி செய்வதாக இலங்கையின் உள்ளுர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் வெளியான சமீபத்திய தகவல்களை நிராகரிப்பதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.

தமது உத்தியோகப்பூர்வ ட்விட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டே சீன தூதரகம் இதனை தெரிவித்துள்ளது.

பெய்ஜிங்கில் உள்ள தொடர்புடைய அதிகாரிகளுடனும் இவ்விடயம் குறித்து ஆராய்ந்ததாகவும் சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து தொடர்ந்தும் விளக்கமளித்த தூதரகம், காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்களின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை மேற்பார்வையிடும் மற்றும் நிர்வகிக்கும் முக்கிய அரச துறையான சீன தேசிய வனவியல் மற்றும் புல்வெளி நிர்வாகம், இந்த கோரிக்கையை அறிந்திருக்கவில்லை என்றும் எந்த தரப்பிலிருந்தும் அத்தகைய விண்ணப்பம் பெறப்படவில்லை என்றும் தெளிவுபடுத்தியது.

வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் அழிந்துவரும் உயிரினங்களின் சர்வதேச வர்த்தகம் தொடர்பான மாநாட்டின் ஒப்பந்தக் கட்சியாக, சீனா ஏற்கனவே 1988ஆம் ஆண்டில் அதன் வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்தை பல திருத்தங்களுடன் ஏற்றுக்கொண்டுள்ளது என்பதை தூதரகம் மேலும் வலியுறுத்த விரும்புகிறது.

சீன அரசாங்கம் எப்போதும் வனவிலங்கு பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதுடன், சர்வதேச கடமைகளை தீவிரமாக நிறைவேற்றுகிறது. இது வனவிலங்கு பாதுகாப்பு சட்டம் மற்றும் சட்ட அமுலாக்கத்தின் அடிப்படையில் சீனாவை உலகின் சிறந்த நாடுகளில் ஒன்றாக ஆக்குகிறது என சீன தூதரகம் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

LINK : https://bit.ly/3GV9bwU

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles