நாட்டில் ஏற்பட்டுள்ள அதிக வெப்பமான காலநிலை காரணமாக மக்களின் நாளாந்த நீர் பாவனை சுமார் 10 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
அதன் பிரதி பொது கண்காணிப்பாளர் என். யு. கே. ரணதுங்க இதனை தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் முடிந்தவரை தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் நிலைமையை நிர்வகித்து வரும் நிலையில், நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்துவதன் மூலம் நீண்டகாலத்திற்கு பிரச்சினையின்றி நீரினை வழங்க முடியும் என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.