முன்னாள் சட்டமா அதிபர் தப்புல டி லிவேராவை எதிர்வரும் 24ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகுமாறு அறிவிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இன்று (21) பயங்கரவாத விசாரணைப் பிரிவுக்கு வருமாறு முன்னாள் சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்ட போதும் அவர் இன்று வருகைத்தரவில்லை.
இதன்படி எதிர்வரும் 24ஆம் திகதி பயங்கரவாத விசாரணைப் பிரிவில் முன்னிலையாகாவிட்டால் அது தொடர்பில் நீதிமன்றத்திற்கு அறிவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என முன்னாள் சட்டமா அதிபருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 19ஆம் திகதி, உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல் தொடர்பிலான விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குவதற்காக, தப்புல டி லிவேரா பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், அன்றைய தினம் அவர் விசாரணைப் பிரிவில் முன்னிலையாகவில்லை.
எனினும் அன்றைய தினம் சட்டத்தரணி ஊடாக சட்ட ஆட்சேபனையை தாக்கல் செய்ய முன்னாள் சட்டமா அதிபர் ஏற்பாடு செய்திருந்தார்.