நடிகை சமந்தா நடித்து கடந்த 14ம் தேதி வெளியான படம், ‘சாகுந்தலம்’. இந்தப் படம் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. படக்குழுவும் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று புரமோஷன் செய்தது. ஆனாலும் வரவேற்பை பெறவில்லை. குணசேகர் இயக்கி இருந்த இந்தப் படத்தை அவருடன் சேர்ந்து தில் ராஜூவும் தயாரித்திருந்தார். ரூ.60 கோடி செலவில் படம் உருவானதாகக் கூறப்படுகிறது.
ரிலீஸுக்கு முன்பே டிஜிட்டல் உரிமையை ரூ.35 கோடிக்கு விற்றுவிட்டதாகவும் சாட்டிலைட் உரிமைக்கு ரூ.15 கோடி கேட்டதால், யாரும் வாங்கவில்லை என்றும் கூறப்படுகிறது. இப்போது சாட்டிலைட் உரிமையை குறைந்த விலையிலேயே கேட்பதால் ரூ.20 கோடிக்கு மேல் நஷ்டத்தைச் சந்திக்கும் என்று கூறப்படுகிறது