இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இந்திய பிரதமர் மோடி இன்று கேரளா செல்லவுள்ள நிலையில், கேரள நகர் கொச்சியில் இருந்து பிரதமர் மோடி மீது தற்கொலைப்படை தாக்குதல் நடத்த உள்ளதாக கொச்சியை சேர்ந்த ஜோணி என்பவரது பெயரில் கொலை மிரட்டல் கடிதம் ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்நிலையில், பிரதமர் செல்லும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளதோடு, குறித்த கொலை மிரட்டல் கடிதம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளில் ஈடுபட்டிருந்ததோடு, கடிதம் அனுப்பிய நபரை கைது செய்துள்ளனர்.
கொச்சியில் வர்த்தகம் செய்து வரும் கைது செய்யப்பட்ட நபர், ஜோணி என்பவர் மீது தனக்கிருந்த தனிப்பட்ட பகை காரணமாக அவரை பொலிஸாரிடம் பிடிப்பட வைக்க இந்த கடிதத்தை எழுதியிருந்தது விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.