NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாடசாலை மாணவர்களிடையே கஞ்சா பாவனை அதிகரிப்பு – ஆய்வு தகவல்!

பாடசாலை மாணவர்களிடையே கஞ்சாவை பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருவதாக, தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

போதைப்பொருள் பயன்படுத்துபவர்கள் முதலில் எந்த வயதில் மருந்துகளைப் பயன்படுத்தினார்கள் என்பது குறித்த ஆய்வில், 49 சதவீதமானவர்கள் 16 முதல் 20 வயது வரை முதல் முறையாக மருந்துகளைப் பயன்படுத்தியது தெரியவந்துள்ளது.

44 சதவீதம் பேர் 11 வயது முதல் 15 வயது வரை முதல் முறையாக போதைப்பொருளைப் பயன்படுத்தியிருப்பதும் தெரியவந்துள்ளது.

கடந்த காலங்களில் தூள், மாவா, பாபுல் போன்ற போதைப் பொருட்கள் பாடசாலை மாணவர்கள் மத்தியில் பரவலாகப் பரவியிருந்த நிலையில், அண்மைக் காலமாக ஐஸ் போதைப்பொருள் பரவும் போக்கு அதிகரித்துள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

பாடசாலை மாணவர்கள் கஞ்சா பாவனைக்கு அதிக நாட்டம் காட்டுவதால் அதனை கட்டுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் ஊடகப் பேச்சாளர் சாமர கருணாரத்ன தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles