NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாவனையாளர்களுக்காக அப்டேட் ஆகியுள்ளது டெலிகிராம் !

டெலிகிராம், பல புதிய அம்சங்கள் குறித்து, அதன் பயனர்களுக்கு சமீபத்தில் ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அந்த அப்டேட்டில், சேட் ஃபோல்டர்கள் (chat folders) முழுவதையும் லிங்க் (link) மூலம் பகிரும் வசதி, தனிப்பட்ட சேட்களுக்கான (chat) தனிப்பயனாக்கிக் கொள்ளக் கூடிய வால்பேப்பர்களை உருவாக்குதல், சேட்-இல் இணைய செயலிகளைப் பயன்படுத்துதல் மற்றும் இது போன்ற பல அம்சங்கள் குறித்து விவரித்து இருந்தது.

Shareable Chat Folders அம்சம் மூலம், பயனர்கள் இப்போது லிங்கைப் பயன்படுத்தி சேட் ஃபோல்டர்களை நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் எளிதில் பகிர்ந்து கொள்ளலாம். இதனால் கொலாபரேட் செய்வது அல்லது ஒன்றாக இணைந்து செயல்படுவது மிகவும் சுலபமாக இருக்கும். டெலிகிராம் தங்கள் வலைப்பதிவு இடுகையில் குறிப்பிட்டுள்ளபடி, பொதுவான சேட்ஸ் அல்லது பயனர் நிர்வாக உரிமைகள் உள்ள சேட்ஸ் மட்டுமே பகிரப்பட்ட ஃபோல்டரில் சேர்க்கப்படும்.

மற்றொரு அம்சம், குறிப்பிட்ட சேட்களுக்கு தனிப்பயனாக்கப்பட்ட வால்பேப்பர்களை அமைத்துக் கொள்ளலாம். எந்தவொரு 1-ஆன்-1 சேட் (chat)-லும் பிடித்த புகைப்படங்கள் அல்லது வண்ண வால்பேப்பர்களை அமைத்து உரையாடல்களைத் தனிப்பயனாக்கிக் கொள்ளலாம்.

வால்பேப்பரை மாற்ற வேண்டும் என்றால், Android இல் பயனர்கள் தங்கள் சேட் ஹெட்டருக்குச் (chat header) சென்று Set Wallpaper என்பதைக் கிளிக் செய்யலாம் அல்லது iOS இல் சுயவிவரத்தை ஓப்பன் செய்து ‘வால்பேப்பரை மாற்றவும் (Change Wallpaper) என்பதை கிளிக் செய்யலாம்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles