ஜப்பானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் குற்றங்கள் தொடர்பான புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளனர்.
அதன்படி, மற்றவர்களுக்குத் தெரியாமல் எடுக்கப்படும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் தொடர்பாக இந்த சட்டம் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் விளக்கம் யாதெனில், பிறப்புறுப்பின் புகைப்படங்களை யாருடைய அனுமதியின்றி எடுக்கவோ, விநியோகிக்கவோ அல்லது வைத்திருப்பதோ தடைசெய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு பதிவாகும் குற்றச் செயல்களுக்கு உள்ளுர் அரச சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்பதும் சிறப்பு விடயமாக அச்சட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதன்படி, இந்தச் சட்டத்தின் மூலம், பாலியல் குற்றங்கள் தொடர்பான ஜப்பானின் சட்டங்கள் முழுமையாக சீர்திருத்தப்பட்டு, பாலியல் வல்லுறவுகளுக்கான வரையறையும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
குற்றம் நிரூபிக்கப்பட்டவர்களுக்கு மூன்று ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சீர்திருத்தங்கள் ஜூன்மாதம் முதல்; ஏற்றுக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக நாட்டின் சட்டமன்ற உறுப்பினர்கள் குறிப்பிட்டுள்ளனர்.