சீனி மற்றும் கோதுமை மாவின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோகிராம் சீனியின் மொத்த விலை 25 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் நிஹால் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஒரு கிலோ சீனியின் மொத்த விலை 225 ரூபாவாகவும், புதிய விலை 250 ரூபாவாகவும் இருந்தது. சீனி ஏற்றுமதிக்கு இந்தியா கட்டுப்பாடு விதித்துள்ளதால் விலை உயர்வடைந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் மொத்த விலை 210 ரூபாவாக அதிகரிக்குமென அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.