கொழும்பில் நடைபெறவுள்ள இலங்கை மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் 25ஆவது அமர்வின் போது ஐரோப்பிய ஒன்றியமும் இலங்கையும் GSP+ வரி சலுகை மற்றும் ஏனைய விடயங்கள் குறித்து கலந்துரையாடவுள்ளன.
நாளை வெளிவிவகார அமைச்சில் கூட்டப்படவுள்ள இக்கூட்டத்திற்கு, இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் அருணி விஜேவர்தன மற்றும் ஐரோப்பிய வெளிவிவகார நடவடிக்கையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர்.
இரு தரப்புக்கும் பரஸ்பர நலன்களைக் கொண்ட பரந்த அளவிலான மற்றும் பலதரப்பு பிரச்சினைகள் குறித்தும் எதிர்கால ஒத்துழைப்புக்கான திட்டங்கள் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.