நாட்டில் நேற்று வெள்ளிக்கிழமை (12) மாலை 6.00 மணி முதல் 15 திங்கட்கிழமை காலை 6.00 மணி வரை நாடளாவிய ரீதியில் விசேட குற்றத்தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென பொலிஸ் மா அதிபர் அறிவித்துள்ளார்.
இந்த சிறப்பு நடவடிக்கையில், அனைத்து முக்கிய வீதிகளிலும், இரவும் பகலும் தொடர்ச்சியான சோதனைச் சாவடிகள் அமைக்கப்படுவதோடு, வீதிகளில் பயணிக்கும் அனைத்து வகையான வாகனங்களையும் உள்ளடக்கி சோதனை நடத்தப்படும். குற்றச்செயல்கள் அதிகம் நடக்கும் பகுதிகளில் இரவுநேர ரோந்துப் பணி அதிகரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.