(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல் பரவி வருவதால் டெங்கு பாதிப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இந்த வருடம் ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் இன்று காலை வரை தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 33,742 ஆகும்.
இவர்களில் கொழும்பு மாவட்டத்தில் 7,017 நோயாளிகளும், கம்பஹா மாவட்டத்தில் 7,602 நோயாளர்களும், களுத்துறை மாவட்டத்தில் 1,984 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
தற்போது நிலவும் மழையுடனான காலநிலையில் நாளுக்கு நாள் டெங்கு காய்ச்சல்
டெங்கு நோயினால் 22 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதேவேளை, மேல் மாகாணத்தில் 7 பேர் உயிரிழந்துள்ளதுடன், 59 சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் டெங்கு அபாய வலயங்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.