(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
எதிர்வரும் மாதம் முதலாம் திகதி முதல் 2 வருட காலத்திற்கு வாடகை அடிப்படையில் பெற்றோலிய கூட்டுதாபனத்திற்கான பராமரிப்பு மற்றும் அவசரகால பதில் கப்பலை இயக்குவதற்கு M/S Sri Lanka Shipping Company Limited நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட கொள்முதல் குழுவின் பரிந்துரையின் பிரகாரம் மின்சக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இந்த யோசனையை சமர்ப்பித்துள்ளார்.