(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
உயர்தர பரீட்சை விடைத்தாள் மதீப்பீடுகள் மூன்று வாரங்களுக்கும் குறைவான காலப்பகுதியில் மேற்கொள்ளப்படுகின்ற போதிலும், பெறுபேறுகள் வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது.
விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், விரைவில் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு பரீட்சை திணைக்களம் செயற்பட வேண்டுமென அதன் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, அரசாங்கத்தின் புதிய வரிக் கொள்கையினால் பல்கலைக்கழக அமைப்பில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து நாளை ஜனாதிபதியுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கல்வி அமைச்சு தனது கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், உயர்தர விடைத்தாள் மதிப்பீட்டில் ஆசிரியர்களின் பங்களிப்பு தற்போது கிடைத்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், கடந்த பரீட்சைகளின் மதிப்பீட்டுப் பணிகளுக்கான ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் இதுவரை வழங்கப்படவில்லை என அதன் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் சுட்டிக்காட்டியுள்ளார்.