(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
விஜய் தொலைக்காட்சியில் தமிழ் மொழியை மையப்படுத்தி ஒளிபரப்ப்பட்ட நிகழ்ச்சி தமிழ்ப்பேச்சு எங்கள் ஆகும்.
தமிழ்நாட்டில் சிறந்த பேச்சாளர்களை அடையாளம் காண்பதே இந்த நிகழ்ச்சியுடைய முக்கிய நோக்கமாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ் பேச்சு எங்கள் மூச்சு என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பானது. அதற்குப்பின் இந்த நிகழ்ச்சி நடைபெறவில்லை. தற்போது மீண்டும் இந்த நிகழ்ச்சியை விஜய் டிவி நிறுவனம் தொடங்கி இருக்கிறது.
தமிழகம் முழுவதும் உள்ள பல ஊர்களில் இதற்கான தேடலை விஜய் டிவி நடத்தி இருக்கிறது. பல ஆண்டுகள் கழித்து இந்த நிகழ்ச்சி மீண்டும் தொடர்ந்து ஒளிபரப்பாகி வருகிறது. நெல்லை கண்ணன் மற்றும் அறிவுமதி ஆகியோர் நடுவர்களாக இருந்து வருகின்றனர்.
பிக்பொஸ் பிரபல்யமான செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத் மற்றும் விஜய் டிவியின் சிரேஷ்ட தொகுப்பாளர் ஈரோடு மகேஷும் தொகுத்து வழங்கி வருகின்றனர். தமிழகத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் போட்டியாளர்கள் கலந்துகொண்டு வருகின்றனர்.
அண்மையில், ஒளிபரப்பான நிகழ்ச்சி ஒன்றில் இரு போட்டியாளர்கள் ‘வலைதள போராளிகளின் ஆவேசம் சமூக அக்கறையே அல்லது வீண் விளம்பர தேடலே’ என்ற தலைப்பில் கீழ் போட்டியிட இருந்தனர்.
ஆனால், இது ஒளிபரப்பப்பட்ட போது அக்கறை என்ற வார்த்தைக்கு பதில் அக்கரை என்று போட்டு இருந்தனர். இதனை நெட்டிசன்கள் பலர் சுட்டிக்காட்டி ‘நிகழ்ச்சியின் பெயரோ ‘தமிழ்ப்பேச்சு எங்கள் மூச்சு’ஆனா அதிலும் தமிழ் கொஞ்சம் பிழையா போச்சு என்று’ என்று விமர்சித்து வருகின்றனர்.