(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
ஆரம்ப மருத்துவமனைகளில் தற்போது பற்றாக்குறையாக உள்ள அத்தியாவசிய மருந்துகளை உலக வங்கி நிதியுதவியின் கீழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப மருத்துவமனைகளில் ஏற்கனவே சில அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவுவதாக சுகாதார அமைச்சின் ஆரம்ப சுகாதார அமைப்பின் உலக வங்கியின் திட்டப் பணிப்பாளர் வைத்தியர் ஜெயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக சுகாதார அமைச்சின் கோரிக்கைக்கு அமைவாக உலக வங்கியின் விதிமுறைகளின் கீழ் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.