நாட்டில் உள்ள 61 சுகாதார வைத்திய அதிகாரிகள் அலுவலகங்கள் டெங்கு அபாய வலயங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
இவற்றில் 15 வைத்திய அலுவலகங்களில் கடந்த சில தினங்களை விட டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு காணப்படுவதாக சமூக சுகாதார நிபுணர் வைத்தியர் லஹிரு கொடிதுவக்கு தெரிவித்துள்ளார்.
நாட்டில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 36,560 ஆகும். அதன்படி, மொத்த நோயாளிகளில் 50 சதவீதமானோர் மேல் மாகாணத்தில் இருந்து அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் கம்பஹா மாவட்டத்தில் 8,200 நோயாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் 7,600 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மொத்த நோயாளிகளில் 25 சதவீதம் பேர் 5-19 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர் கூறினார்.