(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
நாட்டின் மக்கள் தொகையில் 17 சதவீதம் பேர், அதாவது 39 இலட்சம் பேர் இன்னும் கடுமையான உணவுப் பற்றாக்குறையின் கீழ் உள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் உலக உணவுத் திட்டம் இணைந்து நடத்திய உணவுப் பயிர்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு மதிப்பீட்டு பணி அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் உணவுப் பாதுகாப்பின்மை படிப்படியாக குறைந்து வருவதாகவும், கடந்த ஆண்டு மட்டும் 66,000 பேர் கடுமையான உணவுப் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும், கடந்த ஆண்டு (2022) ஜூன் மற்றும் ஜூலை மாதங்களுடன் ஒப்பிடுகையில், கடுமையான உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 40 சதவீதமாக குறைந்துள்ளது.
உணவுப் பொருட்களின் விலைகள் ஒரு குறிப்பிட்ட அளவிற்குக் குறைந்துள்ளதாலும், அறுவடையின் காரணமாக வருமான மட்டம் அதிகரித்துள்ளமையாலும், மக்களின் உணவுப் பாவனை முறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அறிந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.