(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் பல மாதங்களாக அடையாளம் காணப்படாத 37 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஊடகப் பேச்சாளர் இதனை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் கருத்து தெரிவித்த அவர், 18 சடலங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சடலங்களின் உரிமையாளர்கள் வந்து உரிமை கோரும் வரை ஒரு மாத காலம் குளிரூட்டியில் வைக்கப்படும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதற்கமைய, அவசர சிகிச்சைப்பிரிவு அல்லது வெளிநோயாளர் பிரிவுக்குள் வரும் நோயாளிகளின் விபரங்கள் பதிவு செய்யப்பட்டாலும், உரிமையாளர்கள் முன்வராத சடலங்கள் ஒரு மாத இறுதியில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு அரசாங்கத்தின் சொந்த செலவில் புதைக்கப்படும் எனவும் அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.