(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இலங்கையில் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகளை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுற்றாடல்துறை அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
அதன்படி இந்த மாத இறுதிக்குள் பிளாஸ்டிக் சார்ந்த உற்பத்திகள் முற்றாக தடை செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிளாஸ்டிக் கூடைகள், பிளாஸ்டிக் மாலைகள் மற்றும் பல பிளாஸ்டிக் பொருட்கள் நேற்று முதல் (01) தடை செய்யப்படுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. மத்திய சுற்றாடல் அதிகாரசபை இதற்கான நடவடிக்கையை எடுத்திருந்தாலும், இந்த தடையை நடைமுறைப்படுத்த தாமதமாகலாம் என நேற்று செய்திகள் வெளியாகியிருந்தமை சுட்டிக்காட்டத்தக்கது.