கொவிட் தொற்றுக்கு பின்னர் ஜப்பானியர்கள் சிரிப்பதற்கு தவறியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்றால் ஏற்பட்ட தாக்கம் மட்டுமல்லாமல், கொரோனா பரவாமல் இருக்க அவர்கள் கடைபிடித்த மாஸ்க் அணியும் பழக்கம் தான் அந்நாட்டு மக்கள் சிரிப்பதற்கு தடையாக அமைந்த முதல் காரணி எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், டோக்கியோவில் உள்ள கலை கல்வி நிறுவனம் ஒன்று சிரிக்க மறந்த ஜப்பானிய மக்களுக்கு சிரிக்க கற்றுக்கொடுக்கும் வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.
முன்னாள் வானொலி தொகுப்பாளராக பணியாற்றிய கெய்கோ கவானோ இந்த வகுப்பை நடத்தி வருகிறார்.
மேலும் இந்த வகுப்பிற்கு ஒரு மணி நேரத்திற்கு இந்திய ரூபாவில் 4,550 செலுத்தி ஜப்பானிய மக்கள் பலர் சேர்ந்து பயிற்சி பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த வகுப்பில் அவர்களுக்கு சிரிப்பின் முக்கியத்துவம் பற்றியும், எப்படி சிரிக்க வேண்டும் என்பது பற்றியும் ஹாலிவுட் ஸ்டைல் ஸ்மைலிங் நுட்பங்களை கற்கவும் கற்பிக்கப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.க